Kalki Tamil Novels


கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)

(விக்கிப்பீடியாவில் இருந்து)

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதியபொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.





கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளபுத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.

‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.

Click Links to download

அலை ஓசை - பகுதி 1
அலை ஓசை - பகுதி 2
அலை ஓசை - பகுதி 3
அலை ஓசை - பகுதி 4
சோலைமலை இளவரசி 
பார்த்திபன் கனவு - பகுதி 1 & 2
பார்த்திபன் கனவு - பகுதி 3
பொன்னியின் செல்வன் - பகுதி 1
பொன்னியின் செல்வன் - பகுதி 2
பொன்னியின் செல்வன் - பகுதி 3
பொன்னியின் செல்வன் - பகுதி 4
பொன்னியின் செல்வன் - பகுதி 5
பொன்னியின் செல்வன் - பகுதி 6
பொன்னியின் செல்வன் - பகுதி 7
பொன்னியின் செல்வன் - பகுதி 8
பொன்னியின் செல்வன் - பகுதி 9

3 comments:

  1. கல்கியின் நாவல்கள் பதிவிறக்கம் செய்துள்ளேன். தங்களுக்கு மிகவும் நன்றி!
    சிவாயநம!

    ReplyDelete
  2. வள்ளுவராஜ்October 5, 2022 at 6:16 AM

    பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமாண்டமாக வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகும் அந்த நாவலை இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் வைத்திருப்பது தங்களது உண்மையான சேவை நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது. வாழ்க தங்கள் தமிழ் சேவை.

    ReplyDelete